2021 (2022) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பில் குறிப்பிட்ட திகதியை அறிவிக்க முடியாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.
இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், நாட்டில் பிரச்சினைக்குரிய சூழ்நிலை நிலவுகின்ற போதிலும், கூடிய விரைவில் முடிவுகளை வெளியிட உத்தேசித்துள்ளதாகவும் தெரிவித்தார். எந்த மாதம் என்று சொல்ல முடியாது.
நிச்சயமற்ற உலகில், குறிப்பாக இலங்கையில் எதுவும் உறுதியாகத் தெரியவில்லை,என்றார்.