இன்று காலை கோட்டபாய ராஜபக்ஷ, அவரது மனைவி மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மாலைதீவுக்கு செல்வதற்கான வசதிகளை விமானப்படை வழங்கியது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கையின் அரசியலமைப்பின் படி நிறைவேற்று ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க விமானம் வழங்கப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.