இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் ஏழு பிராந்திய வானொலி நிலையங்களை நீண்ட கால குத்தகை அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கதுரட்ட, ருஹுனு, மேற்கு மற்றும் ரஜரட்ட உள்ளிட்ட ஏழு பிராந்திய வானொலி நிலையங்களை வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இம்மையங்களை தனியார் முதலீட்டாளர்களிடம் ஒப்படைத்தாலும் ஒரே நிறுவனமாகப் பராமரிக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
தற்போது, கூட்டுத்தாபனம் மற்றும் அதன் பிராந்திய வானொலி நிலையங்கள் திறைசேரி நிதியில் இயங்குகின்றன.