யாழில் தனிமைப்படுத்தல் விதிமுறை; அதிகாரிகளை ஏமாற்றி இடம்பெற்ற திருவிழா

யாழில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் சுகாதார அதிகாரிகளை ஏமாற்றி கைதடி, நவபுரம் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி இன்று ஆலய திருவிழா நடைபெற்றமை தொடர்பில் விசனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

மதச்சடங்கில் நேற்று, சுகாதார விதிமுறைகளை மீறி இடம்பெற்றுள்ளது.

இதன்போது அயலிலுள்ள இன்னொரு ஆலயத்திலிருந்து காவடியுடன் பக்தர்கள் வீதி வழியாக ஆலயத்திற்கு வந்து, திருவிழா இடம்பெற்றது.

ஆலய திருவிழாவை 50 இற்குட்பட்ட பக்தர்களுடன், ஆலய உள்வீதியில் மட்டும் சுகாதார பிரிவினரால் அறிவுறுத்தப்பட்டது.

எனினும் இன்று சுகாதார விதிமுறைகளை மீறி பெருமளவான பக்தர்கள் குவிந்து திருவிழா இடம்பெற்றது.

கலந்து கொண்டிருந்த பக்தர்களில் பலர் முகக்கவசமும் அணிந்திருக்கவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும் தனிமைப்படுத்தல் உத்தரவை மீறி இடம்பெற்ற இந்த விவகாரம் தொடர்பாக சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை யாழில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துவரும் நிலையில், சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை உதாசீனம் செய்து மக்கள் இவ்வாறு சமூக பொறுப்பின்றி செயல்படுவது தொடர்பில் பலரும் கண்டங்களை தெரிவிக்கின்றனர்.

Next Post

கொரோனா தொற்று இல்லை என வீட்டுக்கு வந்தவர் உயிரிழந்தார்

Wed Aug 11 , 2021
கடுமையான இருமல் மற்றும் காய்ச்சலுடன் காலி கராப்பிட்டிய மருத்துவமனைக்கு வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரிவித்து வீட்டிற்கு அனுப்பப்பட்ட நிலையில் அன்று இரவில் உயிரிழந்துள்ளார். பின்னர் அவருக்கு நடத்தப்பட்ட பிசிஆர் சோதனை மூலம் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. உயிரிழந்தவர் காலி யக்கலமுல்லையைச் சேர்ந்த 45 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu