அகமதாபாத்தில் நடைபெற்று வரும் IPL இறுதி போட்டி மழை காரணமாக தடைப்பட்டுள்ளது.
நாணய சூழற்சியில் வெற்றியீட்டிய சென்னை சுப்பர்ஜஐ கிங்ஸ், முதலில் கள தடுப்பை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 214 ஓட்டங்களை பெற்றது.
குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பில் சாய் சுதர்ஷன் 96 ஓட்டங்களை பெற்றார்.
பதிலுக்கு 215 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, மூன்று பந்துகளை எதிர்கொண்டு 4 ஓட்டங்களை பெற்ற நிலையில், போட்டிக்கு மழை குறுக்கிட்டது.
இதனால், இறுதி போட்டி தடைப்பட்டுள்ளது.