எரிபொருள் விலை நிர்ணயம் மற்றும் கொள்வனவு தொடர்பில் பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கோப் குழுவில் விசாரணை நடத்துமாறு அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஒரு லீற்றர் பெற்றோல் மற்றும் டீசல் அண்ணளவாக 250 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத், அதன் உறுப்பினர்களான அமைச்சர் மஹிந்த அமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோருக்கு இடையில் உரையாடல் இடம்பெற்றுள்ளது.