மக்கள் தொகையில் சீனாவை இந்தியா இவ்வாண்டு பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடிக்கும்: ஐ.நா சபை கணிப்பு

மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவை, இந்தியா இவ்வாண்டு பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடிக்கும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டிற்கான உலக மக்கள் தொகை அறிக்கையை ஐ.நா.வின் மக்கள் தொகை நிதியம் இன்று வெளியிட்டுள்ளது.

அதில் உலகில் மக்கள் தொகை வளர்ச்சி எவ்வாறு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மக்கள் தொகையில் இந்தியா, இவ்வாண்டு சீனாவை பின்னுக்குத் தள்ளும் எனவும் இந்த ஆண்டின் இறுதியில் இந்திய மக்கள் தொகை 142.86 கோடியாக இருக்கும் எனவும் சீன மக்கள் தொகை 142.57 கோடியாக இருக்கும் எனவும் மூன்றாம் இடத்தில் இருக்கும் அமெரிக்க மக்கள் தொகை 34 கோடியாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மக்கள் தொகையில் இவ்வாண்டின் எந்த தினத்தில் இந்தியா சீனாவை பின்னுக்குத் தள்ளும் என்பதை துல்லியமாகக் கூற முடியாது என ஐ.நா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டின் இறுதியில் உலக மக்கள் தொகை 804.50 கோடியாக இருக்கும் எனவும் இந்த எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தொகையை இந்தியாவும் சீனாவுமே கொண்டிருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருந்தாலும், இவ்விரு நாடுகளிலும் மக்கள் தொகை பெருக்க வேகம் தற்போது குறைந்து வருகிறது.

கடந்த 60 ஆண்டுகளாக ஆண்டுக்காண்டு உயர்ந்து கொண்டே இருந்த சீன மக்கள் தொகை கடந்த ஆண்டுதான் முதல் முறையாக அதற்கு முந்தைய ஆண்டைவிட குறையத் தொடங்கியது. இனி, இது தொடர்ந்து குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீன மக்கள் தொகை சரிவு அதன் பொருளாதாரத்திலும், உலகிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்தியாவில் கடந்த 2011 முதல் அதன் சராசரி மக்கள் தொகை வளர்ச்சி 1.2 சதவீதமாக உள்ளது. அதற்கு முந்தைய 10 ஆண்டுகளில் இந்த வளர்ச்சி 1.7 சதவீதமாக இருந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை !

Wed Apr 19 , 2023
வினாத்தாள் மதிப்பீட்டு பணிக்கு செல்ல மறுத்தால் கல்விச் சேவை அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கல்வி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்வியை பணயக் கைதிகளாக்குவதை ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும் அடுத்த வாரத்திற்குள் ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு செல்ல மறுத்தால் அவசரச் சட்டத்தின் கீழ் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu