கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் மேலும் 31 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 20 ஆண்களும், 11 பெண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 408 ஆக அதிகரித்துள்ளது.

Next Post

30,000 மெட்ரிக் டொன் பொட்டாசியம் குளோரைட் உரங்கள் இலங்கைக்கு

Wed Oct 13 , 2021
பெரும்போகத்திற்கு தேவையான 30,000 மெட்ரிக் டொன் பொட்டாசியம் குளோரைட் உரங்கள் இன்று (13) மாலை கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டு கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்டன.   வெகுரோஸ் கப்பல் மூலம் லிதுவேனியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த உரங்கள் இன்று (13) இரவு அம்பாறை, மட்டக்களப்பு, அனுராதபுரம், பொலனறுவை, குருநாகல், புத்தளம், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் உள்ள கமநல அபிவிருத்தி திணைக்களங்களுக்கு அனுப்பப்படும்.

You May Like