இரத்தினகல் வியாபாரிக்கு 5 லீற்றர் பெற்றோல் கொடுக்க அவரிடம் 5 போத்தல் மதுபானம் வாங்கிய சம்பவம் இரத்தினபுரி – இரக்குவானையில் இடம்பெற்றுள்ளது.
சிறு இரத்தினகல் வியாபாரியான இவர் தனது காரில் இரக்குவானை நகருக்கு சென்றிருந்தார். பின்னர், தனது காருக்கு ஐந்து லிற்றர் பெற்றோலுக்கு திரிந்து பெற முடியவில்லை. இந்நிலையில் சில இளைஞர்களைச் சந்தித்த குறித்த வர்த்தகர் அவர்களிடம் எங்கேயும் பெற்றோல் எடுக்கலாமா என விசாரித்தார். அதன்போது அந்த இளைஞர்கள் மதுபானம் வாங்கி தந்தால் பெற்றோல் வாங்க உதவலாம் என்றனர்.
இதற்கு அந்த இரத்தினகல் வியாபாரி இரவு வெகுநேரமாகியதால், சரியென மதுபானக்கடை ஒன்றிற்குச் சென்று ஐந்து மதுபான போத்தல்களை வாங்கி இளைஞரிடம் ஒப்படைத்துள்ளார்.
இதையடுத்து அவரை கூட்டி சென்று சட்டவிரோதமாக எரிபொருள் விற்பனை செய்யும் நபரை சந்தித்து ஐந்து லீற்றர் பெற்றோலை வழங்கி கொடுத்துள்ளனர்.