கொரோனா நிலைமையால் அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றும், இந்த நிலையில் பொருளாதார நெருக்கடி இல்லை என்று கூறுவது வேடிக்கையானது என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.