*பாடசாலைகளை மீள திறக்கும் நடவடிக்கை தொடர்பில் கெஹலிய ரம்புக்வெல முக்கிய அறிவிப்பு

ஆசிரியர்கள் உட்பட கல்வி சாரா ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளமையினால், பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவடைந்தவுடன், பாடசாலைகளை மீள திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

ஜூம் கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கெஹலிய ரம்புக்வெல மேலும் கூறியுள்ளதாவது, “12 முதல் 18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், உலக சுகாதார நிறுவனம் உட்பட சர்வதேச நிறுவனங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான பல அளவுகோல்களை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதன்பின்னர் தரம் 7 முதல் தரம் 13 வரையிலானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படலாம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Thedal news Sri Lanka …

Next Post

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தகவல் நாளை

Tue Sep 14 , 2021
பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து நாளைய தினம் (15) நடத்தப்படும் பேச்சுவார்த்தையின் பின்னர் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் இருவேறு கருத்துக்கள் காணப்படுவதாக அவர் கூறுகின்றார். 12 முதல் 18 வயது வரை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது மற்றும் தரம் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu