நாட்டிற்கு அந்நிய செலாவணியை கொண்டு வரும் நபர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் விசேட வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, இந்த நாட்டிற்கு அனுப்பப்படும் வெளிநாட்டு நாணயத்தின் அளவைப் பொறுத்து, அவர்கள் மின்சார வாகனத்தை கொண்டு வர அனுமதிக்கப்படுகிறார்கள்.
இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் சந்திப்பில் கலந்து கொண்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார்.