அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்க திட்டமிட்டுள்ளதாக மருந்து தயாரிப்பு விநியோகம், கட்டுப்பாடு தொடர்பான ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அமெரிக்காவில் இருந்து ஒரு தொகை பைசர் தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் அவை இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.
?05 முதல் 11 வயதுடைய குழந்தைகளுக்கு #பைசர் தடுப்பூசி பாதுகாப்பானது என்றும், வலுவான நோயெதிர்ப்பு திறனை உருவாக்குவதாக #பைசர் மற்றும் பயோஎன்டெக் இன்று திங்கள் மருத்துவ சோதனை முடிவுகளில் கிடைத்துள்ளது., அவர்கள் விரைவில் அதற்கான ஒழுங்குமுறை ஒப்புதலைப் பெறுவார்கள் என்று மருந்து தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.