ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்காமல் இருந்திருந்தால், இலங்கையை இன்று கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்காமல் இருந்திருந்தால், இலங்கையை இன்று கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வலுப்பெறுவதற்கு மூலோபாய நடவடிக்கைகளே காரணம் என்று சில தந்திர அரசியல்வாதிகள் கூறினாலும், டொலரின் தேவை மற்றும் விநியோகத்தால் ரூபாயின் மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது என்பதே யதார்த்தம் என்றும் அவர் கூறினார்.

ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நாட்டைக் கைப்பற்றவில்லையென்றால், இன்று இலங்கையை உலக வரைபடத்தில் கூட காண முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.

ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்ற போது அத்தியாவசிய சேவைகளான எண்ணெய், எரிவாயு மற்றும் மின்சார விநியோகங்கள் முற்றாகத் தடைப்பட்டிருந்ததையும் அவர் நினைவு கூர்ந்தார்.

ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றது முதல், அவர் அந்தச் சிக்கல் நிலைகளில் இருந்து நாட்டை விடுபட வைத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கண்டி – மஹியங்கனை வீதியின் 18 வளைவு பகுதி மறு அறிவித்தல் மூடப்படும்

Mon Mar 20 , 2023
கண்டி – மஹியங்கனை வீதியின் 18 வளைவு பகுதி மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும் என நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது. மண்சரிவு மற்றும் கற்பாறை சரிவு காரணமாக குறித்த வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்தவீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu