மனைவி அடித்து குடிகார கணவன் சம்பவ இடத்தில் மரணம்
அவிசாவெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தைகல கபுவெல்ல வத்த பிரதேசத்தில் 27 வயது மனைவியால் தாக்கப்பட்டு 29 வயது கணவன் சம்பவ இடத்திலேயே மரணம். மேலதிக விசாரணை அவிசாவளை பொலிசார் மேற்கொள்கின்றனர் இவ்வாறு மரணம் அடைந்தவர் அவிசாவளை தைகல கபுவெல்ல பிரதேசத்தை சேர்ந்த 29 வயது உடைய ஜனக
மதுசங்க ஜயதிலக்க என்ற இளைஞன்
குறித்த இளைஞன் தினம் குடிபோதையில் வந்து தனது மனைவியை தாக்குதலுக்கு உள்ளாகியும் மற்றும் அடித்து சித்திரவதை செய்வதாகவும் இதன் காரணமாக குறித்த இளைஞனின் மனைவி நேற்று இரவு இந்த இளைஞனால் தாக்கப்பட்டுள்ளார் அடி தாங்க முடியாத மனைவி குறித்த இளைஞன் கட்டிலில் படுத்துக்கொண்டு மனைவியை கொள்வதாக அச்சுறுத்திக் கொண்டு இருந்த போதில் 27 வயது உடைய மனைவி கம்பால் குறித்த இளைஞனின் தலையில் அடித்ததால் படுகாயமடைந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். மனைவி தனது 8 வயது மகளுடன் வீட்டில் இறந்த சடலத்துடன் தங்கியிருந்து அதிகாலை மகளை தனது மாமியாரிடம் கொண்டு கையளித்து விட்டு அவிசாவெல்ல பொலிஸ் நிலையத்தில் சரண் அடைந்ததுள்ளார் மேலதிக விசாரணைகளை அவிசாவெல்ல பொலிசார் மேற்கொள்கின்றனர்