இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் பாதுகாப்பு உத்தியோகத்தரினால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் டிப்பர் சாரதி உயிரிழந்ததையடுத்து மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியிலுள்ள அவரது வீட்டிற்கு முன்பாக மக்கள் பாரிய எதிர்ப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்போது இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் உருவப் படங்களை எரித்து பிரதேச மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.