மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடு எவ்வாறு நீக்கப்படும்

மாகாணங்களுக்கு இடையில் 21ம் திகதிக்கு பின்னர் பயணிக்க அனுமதி வழங்கப்படும் பட்சத்தில், வழமை போன்று பொது போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

21ம் திகதிக்கு பின்னர், மாகாணங்களுக்கு இடையில் தொடர்ந்தும் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் பட்சத்தில், விசேட அனுமதியை பெற்று பொது போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்

Next Post

இலங்கையில் நாளாந்தம் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிவுயர் மட்டத்தில் வீழ்ச்சி

Sun Oct 17 , 2021
இலங்கையில் கொவிட் தொற்றினால் நாளாந்தம் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிவுயர் மட்டத்தில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன்படி, நேற்றைய தினம் (16) கொவிட் தொற்றினால் 12 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,484 ஆக அதிகரித்துள்ளது

You May Like