லெவன்ட் தோட்ட தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினையை தேசிய தொழிலாளர் ஆலோசனை குழு கூட்டத்தில் இன்று கௌரவ அமைச்சர் ஜீவன் தொண்டமான் முன்வைத்தார்
தேசிய தொழிலாளர் ஆலோசனை குழுக்கூட்டம் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தலைமையில் இன்றைய தினம் தொழில் அமைச்சில் இடம்பெற்றது.
இதன்போது பெருந்தோட்ட தொழிலாளர்கள் எதிர்நோக்கும் தொழிற்சங்க பிரச்சினைகள் தொடர்பாக ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கலந்துரையாடினார்
மேலும் கேகாலை லெவன்ட் தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் தொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்ததோடு விரைவில் தீர்வு பெற்றுத்தருமாறும் முன்வைத்திருந்தார்
இக்கலந்துரையாடலில் தொழில் அமைச்சர் நிமால் சிரிபாலடி சில்வா, பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான், தொழில் திணைக்கள ஆணையாளர், மற்றும் சட்டத்தரணி மாரிமுத்து உட்பட தொழில் திணைக்கள அதிகாரிகள் பலர் கலந்துக்கொண்டனர்
Via:
Jeevan Media