கேகாலை மாவட்டத்தில் ஹெம்மாத்தகம நீர் வழங்கல் திட்டம் நாளை முதல் பொதுமக்கள் பாவனைக்கு

ஹெம்மாத்தகம நீர் வழங்கல் திட்டம் நாளை முதல் பொதுமக்கள் பாவனைக்கு

கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க, மாவனெல்ல மற்றும் ரம்புக்கன ஆகிய பிரதேசங்கள் உள்ளடங்கக்கூடிய வகையில் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையால் நிர்மாணிக்கப்பட்ட ஹெம்மாத்தகம நீர்வழங்கல் திட்டம் நாளை(20) அசுபினி எல்ல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டு தலைமை தாங்கி வைபவ ரீதியாக திறந்து வைத்து மக்களிடம் கையளிக்கவுள்ளார்.

கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க, மாவனெல்ல மற்றும் ரம்புக்கன ஆகிய பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த பிரதேசங்களில் நீண்ட காலமாக நிலவி வந்த குடிநீர் பிரச்சினையை பூர்த்தி செய்வதற்காக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இந்த திட்டத்தை ஆரம்பித்திருந்தது.

இந்த திட்டத்திற்காக இலங்கை அரசு ரூபா 3,847 மில்லியன் நிதியை வழங்கியிருந்ததுடன் நெதர்லாந்து அரசு 81.95 மில்லியன் யூரோ நிதி உதவியை வழங்கியுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் புதிய வீட்டு இணைப்புகளுக்கு 25,200 குடிநீர் குழாய்கள் நீர் பொருத்தப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே உள்ள 27,100 நீர்வழங்கல் இணைப்புகள் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இதன்மூலம் 52,300 குடும்பங்களை சேர்ந்த 169,000 மக்கள் குடிநீர் வசதிகளை பெற்றுள்ளார்கள். இவ்வாறு நாள் ஒன்றுக்கு 21,000 கனமீற்றர் கொள்திறனுள்ள புதிய நீர் சேகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளதுடன் திட்ட பிரதேசங்களில் 7 புதிய நீர்த்தாங்கிகள் அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

முஸ்லிம் திருமண‌ ச‌ட்ட‌த்தில் திருத்த‌ம்

Tue May 23 , 2023
நீதி அமைச்ச‌ர் விஜ‌ய‌தாச‌ ராஜ‌ப‌க்ஷ‌வினால் முஸ்லிம் திருமண‌ ச‌ட்ட‌த்தில் திருத்த‌ம் கொண்டு வ‌ர‌ முய‌ற்சிக்கும் எத்த‌கைய‌ முய‌ற்சிக‌ளுக்கும் முஸ்லிம் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ள் ஒத்துழைக்க‌ வேண்டாம் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி (உல‌மா க‌ட்சி) தலைவர் மௌல‌வி முபாற‌க் அப்துல் ம‌ஜீத் கோரிக்கை விடுத்துள்ளார். இது ப‌ற்றி அக்க‌ட்சி தெரிவித்திருப்ப‌தாவ‌து; முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தை திருத்த‌ வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் இருப‌து பெண்க‌ளை நீதி அமைச்ச‌ர் அழைத்து அவ‌ர்க‌ள் கோரிக்கையை […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu