வவுனியா பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக கலாநிதி த. மங்களேஸ்வரன்

வவுனியா பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக, யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி த. மங்களேஸ்வரன் அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை காலமும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வளாகமாக இயங்கிவந்த “யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம்” எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் “இலங்கை வவுனியா பல்கலைக் கழகம்” எனத் தரமுயரும் என கல்வி அமைச்சர் ஜி. எல். பீரிஸ் அவர்களினால் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் ஒரு நிலையாக யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி த. மங்களேஸ்வரன் முதலாவது துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-Arulkumaran-

Next Post

சீனாவில் இருந்து ஊசிகளுக்கான 1 மில்லியன் சிறிஞ்சிகள்

Tue Jul 13 , 2021
சீனாவில் இருந்து ஊசிகளுக்கான 1 மில்லியன் சிறிஞ்சிகள் (#syringers) இலங்கைக்கு இன்று (13) அதிகாலை கொண்டுவரப்பட்டுள்ளன.

You May Like