ஹெலோவீன் (halloween) கொண்டாட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுள் இலங்கையர் ஒருவரும்

தென் கொரிய தலைநகர் சியோலில் இடம்பெற்ற ஹெலோவீன் (halloween)
கொண்டாட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுள் இலங்கையர் ஒருவரும் உள்ளடங்குவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கண்டி பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் இலங்கையர்கள் கொல்லப்பட்டார்களா அல்லது காயமடைந்துள்ளார்களா என்பதைக் கண்டறிய சியோலில் உள்ள பொலிஸ் மற்றும் மருத்துவமனைகளுக்கு பிரதிநிதிகள் பணிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வெளிவிவகார அமைச்சு மற்றும் தென்கொரியாவிலுள்ள இலங்கை தூதரகம் ஊடாக அறிந்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை தென் கொரியாவின் இதுவரை சுமார் 19 வெளிநாட்டவர்கள் உட்பட 151 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஜனாதிபதி யூன் சுக்-யோல் இன்று தேசிய தினமாக அறிவித்துள்ளார்.

Next Post

தென்கொரிய நெரிசல் சம்பவத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த 27 இலங்கை இளைஞன்

Sun Oct 30 , 2022
தென்கொரிய நெரிசல் சம்பவத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சுமார் 160 பேர்களில் இலங்கை கண்டி, உடதலவின்ன பகுதியை சேர்ந்த நபரே இவராவார். 27 வயதுடைய இளம் குடும்பஸ்தரான முஹமட் ஜினாத் அண்மையில் திருமணம் செய்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்த சகோதரரின் மறுமை ஈடேற்றத்திற்காகவும், அவரது பிரிவால் துயருறும் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு இதய சாந்தி உண்டாவதற்கும், எல்லாம் வல்ல இறைவன் பேரருள் புரிவானாக! 30.10.2022

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu