கொழும்பு வைத்தியசாலைக்குள் கைக்குண்டு : விசாரணைகள் தீவிரம்

நாராஹேன்பிட்டி பகுதியிலுள்ள முன்னணி தனியார் வைத்தியசாலையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டு தொடர்பிலான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முன்னணி தனியார் வைத்தியசாலையிலிருந்து நேற்றைய தினம் (14) இந்த கைக்குண்டு மீட்கப்பட்டிருந்தது.

கைக்குண்டின் பாதுகாப்பு ஆணியை கழற்றி, நுளம்பு சுருளொன்றை இணைத்து, வெடிக்கும் வகையில் இந்த கைக்குண்டு தயாரிக்கப்பட்டுள்ளமை, ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டிருந்தது.

இந்த கைக்குண்டு, வைத்தியசாலையின் முதலாவது மாடியிலுள்ள மலசலகூடத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்த நிலையில், வைத்தியசாலைக்கு விரைந்த பொலிஸார், குண்டு செயலிழக்கும் பிரிவின் ஊடாக குண்டை செயலிழக்க செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மூவரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, குறித்த வைத்தியசாலைக்கு மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகள் பிரசன்னமாகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விடயங்களை ஆராய்ந்த சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன், விசாரணைகளை துரிதப்படுத்துமாறு விசாரணை குழுவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நிலையில், வைத்தியசாலையில் பொருத்தப்பட்டுள்ள CCTV கமராக்களின் ஊடாக ஆரம்பகட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன…

 

 

Next Post

லொஹான் ரத்வத்த அமைச்சரை கைதுசெய்ய முடியுமா

Wed Sep 15 , 2021
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த உள்ளிட்ட குழுவினர் மது போதையில் அநுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைக்குள் சென்று அடாவடியில் ஈடுபட்டமை தொடர்பில் இதுவரை எந்த முறைப்பாடுகளும் பதிவாகவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என சிங்கள ஊடகம் ஒன்று வினவியதற்கே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ இதை கூறினார். அநுராதபுரம் மற்றம் வெலிக்கடை பொலிஸ் […]

You May Like