எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனாவத்த தோட்டத்தில் அந்தோணிசாமி என்பவர் வெளிநாட்டுக்கு பணிப்பெண் ஒருவரை அனுப்புவதற்கு எட்டியாந்தோட்டை பெலல்லேகம 115 கிராம சேவகர் பிரிவில் கிராம உத்தியோகத்தரிடம் போலியான பதிவு சான்றிதழை ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு சென்றபோது கிராம உத்தியோகத்தர் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கொழும்பு லஞ்ச ஒழிப்பு பிரிவினரிடம் புகார் செய்து நேற்று பத்தாயிரம் ரூபாய் லஞ்சப் பணம் பெற்றுக் கொள்ளும் பொழுது லஞ்ச ஒளிப்பு பிரிவின் அதிகாரிகளுடன் கிராம உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டார் இன்று கிராம உத்தியோகத்தர் ருவான்வெல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியல் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார் கிராம உத்தியோகத்தர் எட்டியாந்தோட்டை மஹவில பிரதேசத்தை சேர்ந்த சந்தன வித்தான வசம் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்