GOAT படத்தில் விஜயகாந்த் இடம்பெறும் காட்சிகளை பார்வையிட்ட பிரேமலதா விஜயகாந்த் – என்ன சொன்னார் தெரியுமா ?

விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் திரைப்படம் தான் GOAT . ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் தற்போது முடிவடைந்துள்ளது.

இதையடுத்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக துவங்கி நடைபெற்று வருகின்றது. GOAT திரைப்படம் உலகத்தரத்தில் உருவாகியிருப்பதால் இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை முடிக்க சற்று தாமதமாகும் என தகவல்கள் வந்தன.

இதன் காரணமாகவே ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருந்த இப்படம் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபுதேவா, மோகன் என பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இது ஒருபக்கம் இருக்க இப்படத்தில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்தை ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் GOAT படத்தில் நடிக்க வைக்க வெங்கட் பிரபு முயற்சித்துள்ளார். இதைப்பற்றி பிரேமலதா விஜயகாந்தும் பேசியிருந்தார்.

இந்நிலையில் வெங்கட் பிரபு GOAT படத்தில் விஜயகாந்தின் ரோல் என்னவாக இருக்கும் என்பதை பற்றியும், அவர் வரும் காட்சிகள் பற்றியும் பிரேமலதா விஜயகாந்திற்கு போட்டு காண்பித்துள்ளார். அதனை பார்த்த பிரேமலதா விஜயகாந்திற்கு முழு திருப்தி ஏற்பட்டுள்ளதாம். இதையடுத்து பிரேமலதா விஜயகாந்த் வெங்கட் பிரபுவிற்கு டபுள் ஓகே சொல்லியிருக்கின்றார் பிரேமலதா விஜயகாந்த்.

இந்நிலையில் GOAT படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தான் கேப்டன் விஜயகாந்த் வருவாராம். அவர் வரும் காட்சிகள் மிகப்பெரிய அளவில் பேசப்படும் விஷயமாக இருக்குமாம். அதுமட்டுமல்லாமல் கேப்டன் விஜயகாந்திற்கு மேலும் பெருமை சேக்கும் வகையிலும் அக்காட்சியில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வாகனங்களை கையளித்தார் டயானா...!!

Wed May 15 , 2024
சுற்றுலாத்துறை முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தனது உத்தியோகபூர்வ வாகனங்கள் மூன்றை கடந்த 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாரிகளிடம் கையளித்தார். இரட்டைக் குடியுரிமை விவகாரத்தில் டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி உச்ச நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டது. இதனால், அரசிடம் இருந்து பெற்ற வாகனங்கள் உட்பட அனைத்து சொத்துகளையும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும். டயானா கமகே அரசின் உத்தியோகபூர்வ இல்லத்தை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu