உள்ளூராட்சி சபைத் தேர்தல் நீண்ட காலத்திற்கு ஏற்புடையதல்ல என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமை குறித்து கருத்து தெரிவித்த அவர், ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தலை நடத்துவதே பொருத்தமானது எனவும், ஆனால் தற்போது அசௌகரியமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

“ஏப்ரல் 25ஆம் திகதி இந்தத் தேர்தலை நடத்துவதற்கு தாமதமானால், ஜனாதிபதி எமது எல்லை நிர்ணய அறிக்கையை வழங்கிய பின்னர் அதனுடன் கூடிய வர்த்தமானியை வெளியிட்டால், மீளாய்வுக் குழுவொன்று அமைக்கப்பட்டு, அங்குள்ள வாக்குகளின்படி நாடாளுமன்றம் அதனை தீர்மானிக்க வேண்டும்.

என்னதான் இருந்தாலும், தேர்தல் ஒன்று ஒத்திவைப்பது, தாமதமாவது அவ்வளவு நல்லதல்ல. குறைந்தபட்சம் அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் இந்த தேர்தல் நடத்தப்படும். ஏப்ரல் 25ம் திகதி நடத்தினால் நல்லது. ஆனால் இப்போது நடத்துவது கடினம் என்று தெரிகிறது. ஏனெனில் தபால் வாக்குகளுக்கு கூட அரசு அச்சகத்தில் இருந்து வாக்குச்சீட்டுக்களை பெற்றுக் கொள்ளாத ஒரு நிலை உள்ளதே..”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சவூதி அரேபிய இராச்சியம் இலங்கை மக்களிடையே விநியோகிக்க 50 டொன் பேரீச்சம்பழங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

Sun Mar 19 , 2023
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் கஹில்ட் ஹம்மூத் அலி கட்டானி சமய மற்றும் கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் குறித்த பேரித்தம் பழக் கையிருப்பை கையளித்தார். சவூதி அரேபியாவின் மன்னர் சல்மானின் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையங்கள் உலகெங்கிலும் உள்ள பல நட்பு நாடுகளுக்கு பேரிச்சம் பழங்களை நன்கொடையாக வழங்கி வருகின்றன.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu