இலங்கை தேசிய கிரிக்கெட் அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி ஆகியவற்றின் ஆலோசகராக முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
மஹேல ஜயவர்தன, எதிர்வரும் இருபதுக்கு 20 உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளின் தகுதிகான் போட்டிகளிலும், இலங்கை தேசிய கிரிக்கெட் அணியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை விளையாட்டு சபையின் தலைவராகவும் மஹேல ஜயவர்தன தற்போது செயற்பட்டு வருகின்றார்