ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய் மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாடு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தனது ஒரே மகன் பானுகா பெர்னாண்டோபுள்ளேவின் திருமணத்தை கொவிட் தொற்றுநோய் காரணமாக ஹொட்டலில் நடத்த இருந்த திருமண வைபவத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திருமணம் நாளை வியாழக்கிழமை (12) கொழும்பில் உள்ள ஷங்கரிலா ஹொட்டலில் நடைபெற இருந்தது.
இந்நிலையில் மகனின் திருமணத்தை சுகாதார அறிவுறுத்தல்களின்படி, குறைந்த எண்ணிக்கையிலான தங்கள் உறவினர்களின் பங்கேற்புடன் தேவாலயத்தில் திருமண விழாவை முடிக்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே முடிவு செய்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.