மன்னார் மீனவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றப்படும்- இராணுவத் தளபதி.
கடந்த 7 ஆம் திகதி கொழும்பில் அஸ்ராசெனேகா முதல்தடவையாக ஏற்றியவர்களுக்கு இரண்டாம் தடவையாக பைசர் ஏற்றப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டதால் மீதமுள்ள ஃபைசர் தடுப்பூசிகள் மன்னார் பகுதியில் உள்ள மீனவர்களுக்கு ஏற்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரண தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.
, இந்த மீனவர்கள் தென்னிந்தியாவில் உள்ள சக மீனவர்களுடன் தொடர்பு கொள்ளக் கூடியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இதேவேளை உயர் படிப்புகளுக்காக வெளிநாடு செல்ல திட்டமிடப்பட்டுள்ள 1,130 கொவிட் செயலணிக்குழுவில் பதிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கும் ஃபைசர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. இந்த தடுப்பூசி ஏற்றல் கடந்த வியாழக்கிழமை (ஜூலை 08) இராணுவ மருத்துவமனையில் நடந்தது.
மீதமுள்ள மாணவர்களுக்கு இன்றும் நாளையும் தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்தார்.
“சில நாடுகள் தடுப்பூசி போடாத நபர்களின் நுழைவை அனுமதிக்காது, ஃபைசர் தடுப்பூசி பெறுநர்களை மட்டுமே ஏற்றுக்கொள்கின்றன” என்று இராணுவத்தளபதி தெரிவித்தார்.
இந்த மாதத்தின் 3 வது வாரத்திற்குள் 1.4 மில்லியன் டோஸ் அஸ்ட்ராசெனேகா தடுப்பூசி இலங்கைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பைசர் தடுப்பூசி இரண்டாம் கட்டமாக ஏற்றும் செயற்பாட்டை நிறுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த வாரம் இலங்கை மேலும் 26,000 டோஸ் ஃபைசர் தடுப்பூசியையும், ஜூலை மூன்றாவது மற்றும் நான்காவது வாரங்களில் முறையே 60,000 மற்றும் 90,000 பைசர் தடுப்பூசிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறது.
மேலும் உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் 2,315 மாணவர்கள் சினோபார்ம் தடுப்பூசி பெற தங்களை பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார். அதன்படி, இந்த மாணவர்களுக்கும், வேலைக்காக வெளிநாடுகளுக்கு இடம்பெயர திட்டமிடப்பட்டவர்களுக்கும் சினோபார்ம் தடுப்பூசி போடப்படும், என்றார்.