இலங்கையின் அபிவிருத்தி கொள்கை செயற்பாட்டுத் திட்டம் தொடர்பில் உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற இறுதிச் சுற்று பேச்சுவார்த்தை

இலங்கையின் அபிவிருத்தி கொள்கை செயற்பாட்டுத் திட்டத்தின் முன்னேற்றங்களுக்கு உலக வங்கி பிரதிநிதிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் அபிவிருத்தி கொள்கை செயற்பாட்டுத் திட்டம் தொடர்பில் உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற இறுதிச் சுற்று பேச்சுவார்த்தை, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் தலைமையில் இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற போதே உலக வங்கி பிரதிநிதிகள் மேற்கண்டவாறு பாராட்டு தெரிவித்திருந்தனர்.

பாராளுமன்ற வரவு செலவு திட்ட அலுவலகத்தை (Parliamentary budget office) நிறுவுதல், அரசாங்க நிறுவனங்களை மறுசீரமைப்புச் செய்தல், நலன்புரி கொடுப்பனவுகளை வழங்கும் முறைமை, சமூகப் பதிவு (Social registry) போன்ற இலங்கையின் அபிவிருத்தி கொள்கைக்கான செயற்பாட்டுத் திட்டத்தினை முழுமையாக்குவதற்கு அவசியமான எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் அவற்றுக்கு அவசியமான கால எல்லை என்பன தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

இதன் போது இலங்கையின் அபிவிருத்தி கொள்கை முன்னெடுப்புக்களுக்கு உலக வங்கி வழங்கும் ஒத்துழைப்பிற்கு பாராட்டுத் தெரிவித்த சாகல ரத்நாயக்க இந்த வேலைத்திட்டத்தை சாத்தியமாக்கிக் கொள்வதற்கு அனைவரினதும் ஒத்துழைப்புக்களை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

லங்கா சதொச நிறுவனம் நாளை முதல் அமுலுக்குவரும் வகையில் மூன்று பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

Thu Apr 6 , 2023
இதன்படி 425 கிராம் டின் மீன் 30 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 490 ரூபாவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 22 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 97 ரூபாவாகும். அத்துடன், கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 225 ரூபாவாகக் காட்டப்பட்டுள்ளது.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu