காலிமுகத்திடல் போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளர் அருட்தந்தை அமில ஜீவந்த பீரிஸ் தம்மை கைது செய்ய வேண்டாம் என பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு உயர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
பொலிஸார் தம்மை கைது செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் தனது முறைப்பாட்டில் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.