வெலிகம − கப்பரதொட்ட − ஆரியவத்த பகுதியிலுள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த வெடிப்பு சம்பவம் இன்று காலை 8:30 அளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வெடிப்பு சம்பவத்தில் ஹோட்டலின் உரிமையாளர், அவரது மகன் மற்றும் அயலவர் என மூவர் காயமடைந்துள்ளனர்.
வெடிப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்…