திருமண வைபவங்கள் உள்ளிட்ட நிகழ்வுகள் இவ்வாறு நடத்த அனுமதி

திருமணங்கள், இறுதிச் சடங்குகள், உணவகங்கள், கூட்டங்கள், மற்றும் கருத்தரங்குகளுக்கான சுகாதார வழிகாட்டுதல்கள் நாளை (15) முதல் மேலும் தளர்த்தப்படவுள்ளன.

நாட்டில் கொரோனா பரவுவது ஏதோ ஒரு வகையில் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் சுகாதார கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார சேவைகள் இயக்குனர் இன்று (14) வெளியிட்டுள்ளார்

இதற்கமைய, திருமண மண்டபத்தில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கை 50ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

மேலும், திருமண மண்டபத்தில், மதுபான பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து திருமணங்களும் பதிவு திருமணங்களாக மாத்திரமே நடத்த முடியும்.

இதற்கிடையில், ஒரேநேரத்தில் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளக் கூடியவர்களின் எண்ணிக்கை, 15ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய வழிகாட்டுதல்களின் படி, பல விளையாட்டு நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், உணவகங்களில், இருக்கை திறனுக்கமைய, 30 சதவீதம் வரை, மக்களை உணவருந்த இடமளிக்கலாம். ஆனால், மதுபானம் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கூட்டங்கள், கருத்தரங்குகள் போன்றவற்றை, அதிகபட்சம் 50 பங்கேற்பாளர்கள் கொண்ட ஒரு மண்டபத்தில் நடத்தலாம்

Next Post

அதிபர் − ஆசிரியர் சம்பள முரண்பாட்டு பிரச்சினை

Fri Oct 15 , 2021
அதிபர் − ஆசிரியர் சம்பள முரண்பாட்டு பிரச்சினையை தீர்ப்பதற்கு, பரிந்துரை செய்யப்பட்ட கொடுப்பனவில் மூன்றில் இரண்டு சம்பள கொடுப்பனவை அடுதத வருடம் முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் அது குறித்து ஆராய தயார் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிக்கின்றது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார். சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்காக மூன்று கட்டங்களாக, அதனை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது. இந்த நிலையிலேயே, […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu