இலங்கையில் கொரோனா பரவ ஆரம்பித்த நாள் முதல் இன்று வரையான காலம் வரை 43 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர, பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல ஆகியோருக்கு இன்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
கடந்த ஒரு சில வாரங்களுக்குள் மாத்திரம் 9 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.