பணவீக்கம் அதிகரிப்பு காரணமாக இலங்கையில் சராசரி குடும்பம் ஒன்றின் மாதாந்த நுகர்வுச் செலவு 110,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் நடத்திய விசேட ஆய்வில் தெரியவந்துள்ளது.
2019 ஆம் ஆண்டில் சராசரி குடும்பம் ஒன்றின் மாதாந்த நுகர்வுச் செலவு 63,000 ரூபாவாக இருந்த நிலையில் அது தற்போது 47,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது என ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டு இலங்கையில் 14,500 ரூபாவாக இருந்த மிகவும் வறிய குடும்பத்தின் மாதாந்த நுகர்வுச் செலவு பணவீக்க நிலைமை காரணமாக இன்று 11,000 ரூபாவினால் 25,500 ரூபாவாக அதிகரித்துள்ளதாக பேராசிரியர் தெரிவித்துள்ளார்.