மைக்ரோஸ்கோபிக் போட்டோகிராபி எனப்படும் நுண்ணிய புகைப்படக் கலை சமீப காலமாக ட்ரென்டாகி வருகிறது.
அதாவது சிறிய உயிரினங்களை கேமரா கொண்டு படம்பிடித்து காட்டுவதுதான் மைக்ரோஸ்கோபிக் போட்டோகிராபி.
இந்த போட்டோகிராபி தொடர்பாக நிக்கான் நிறுவனம் நடத்திய போட்டியில் தற்போது லிதுவேனியன் புகைப்படக் கலைஞர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.
அவர் அப்படி என்ன புகைப்படம் எடுத்திருக்கிறார் என்று கேட்கிறீர்களா? அவர் எறும்பின் முகத்தைதான் புகைப்படமாக எடுத்துள்ளார்.
இந்த போட்டோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பிரமாண்டம் என்பது யானை அல்ல! அது நந்தையின் கால்களில் உள்ளது என்பதை உறுதி செய்யும் விதமாக நிக்கான் நிறுவனம் இந்த ஆண்டு நடத்திய மைக்ரோஸ்கோபிக் போட்டோகிராபி போட்டியில் எறும்பின் முகத்தை மிக அழகாக படமெடுத்த லிதுவேனியன் புகைப்படக் கலைஞருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
லிதுவேனியன் யூஜெனிஜஸ் கவாலியாஸ்காஸ்தான் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.
இந்த படத்தில் நீங்கள் பார்ப்பது ஐந்து மடங்கு பெரிதாக்கப்பட்ட எறும்பின் முகம். இதில் மனிதர்களை போலவே கண்கள், மூக்கு, கூர்மையான பற்களை கொண்ட வாய் என அனைத்தையும் தெளிவாக பார்க்க முடிகிறது.
இவையனைத்தும் சினிமாக்களில் காட்சிப்படுத்தப்பட்ட ஏலியன்களின் உருவங்களை ஒத்து உள்ளதாக பலர் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக யூஜெனிஜஸ், ‘இயற்கையில் எந்த பயங்கரமும் இல்லை’ என்று கூறியுள்ளார்.
மேலும், ‘நான் காட்டுப் பகுதிக்கு அருகில்தான் வசிக்கிறேன். எனவே நான் அடிக்கடி குறிப்பிட்ட காட்டு விலங்குகளையும் பார்ப்பேன். ஆனால் புகைப்படக் கலைஞர்களின் முக்கிய குறிக்கோள் படமெடுப்பது அல்ல. கண்டுபிடிப்பதுதான். அப்படி சிறப்பான கண்டுபிடிப்புகளை கொண்ட படங்களினாலும், கடவுள்களின் சிறந்த வடிவமைப்புகளாக இருக்கும் சக உயிர்களாலும் நான் ஈர்க்கப்பட்டேன்.’ என்று கூறியுள்ளார்.