கடந்த 8 ஆம் திகதி நாட்டிற்கு வந்த 3900 மெற்றிக் தொன் எரிவாயு கப்பலில் இருந்து இன்றுவரை எரிவாயு இறக்கப்படாது நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த கப்பலுக்கு இன்னும் 2.5 மில்லியன் டொலர்கள் வழங்கப்படவில்லை. இதனால் மறு அறிவிப்பு வரும் வரை வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்று நிறுவனம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.
இந்த கப்பலுக்கான டொலர் தாமதகட்டணத்துடன் எதிர்வரும் வியாழக்கிழமை வழங்கப்படும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.