ஆசிரியர்களை அடிக்க வேண்டாம் − ஜனாதிபதி பொலிஸாருக்கு உத்தரவு.

ஆசிரியர் சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களை தடுத்து நிறுத்த முயற்சிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தெரிய வருகின்றது.

கொவிட் சட்டத்திற்கு அமைய, கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டமையை அடுத்து, பல்வேறு தரப்பிடமிருந்து எதிர்ப்பு வெளியிடப்பட்ட நிலையிலேயே, ஜனாதிபதி இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆசிரியர்கள் பொறுப்புள்ள படித்தவர்கள் என்பதனால், மக்களை தெளிவூட்டும் கட்டாயம் அவர்களுக்கு உள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக்கூடாது என கூறியுள்ள ஜனாதிபதி, வைரஸ் பரவிவரும் நிலையில், அதற்கான பொறுப்பை அவர்களே ஏற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Next Post

ஹிஷாலினிக்கு நீதிவேண்டி மாலிபொட தோட்ட பொதுமக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Sun Aug 1 , 2021
கேகாலை மாவட்டம் தெரணியகல பிரதேச செயலகத்துக்குட்பட்ட மாலிபொட தோட்டத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த நிலையில், தீ காயங்களுடன் உயிரிழந்த ஹிஷாலினிக்கு நீதிவேண்டி மாலிபொட தோட்ட பொதுமக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டம் மாலி பொட தமிழ் வித்தியாலயம் பாடசாலை முன்பு ஆரம்பமாகி தொழிற்சாலை முன்பு கோசத்துடன் நிறைவடைந்தது இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் தோட்ட தொழிலாளிகளும் கலந்துகொண்டனர்

You May Like