பிரதாப்_போத்தன் காலமானார்

பிரதாப்_போத்தன்ல காலமானார்

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் என பன்முகங்களை கொண்டு இந்திய சினிமாவின் தன்னிகரற்ற திரை பிரபலமாக வலம் வரும் #பிரதாப்_போத்தன் தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்தும், இயக்கியும் உள்ளார்.தேசியவிருது வாங்கிய நடிகர்.

சென்னை: நடிகரும், திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான பிரதாப் போத்தன் இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 69.

நடிகர் சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் அவர் உயிர் பிரிந்தது. 1980 களில் இருந்து மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடிகராக, திரைக்கதை எழுத்தாளராக, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக முத்திரை பதித்தவர் பிரதாப் போத்தன்.

ஆகஸ்ட் 13, 1952 இல் பிறந்த இவர், ஊட்டியில் உள்ள லாரன்ஸ் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தவர். பிறகு, பட்டப்படிப்பை சென்னை கிறித்துவக் கல்லூரியில் முடித்தார். மும்பை விளம்பர நிறுவனத்தில் நகல் எழுத்தாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய பிரதாப். 1978 ஆம் ஆண்டு இயக்குனர் பரதனின் ஆரவம் திரைப்படத்தில் அறிமுகமானார். தகரம், ஆரோகணம், வறுமையின் நிறம் சிவப்பு, மூடுபனி, பன்னீர் புஷ்பங்கள், தன்மாத்ரா, 22 பெண் கோட்டயம், படிக்காதவன் மற்றும் பெங்களூர் டேஸ் ஆகியவை அவரது பிரபலமான திரைப்படங்களில் சில.

இவர் கடைசியாக மம்மூட்டி நடித்த ‘சிபிஐ5: தி பிரைன்’ படத்தில் நடித்தார். மோகன்லால் இயக்கி வரும் ‘பரோஸ்: கார்டியன் ஆஃப் டி’காமா’ஸ் ட்ரெஷரிலும் பிரதாப் போத்தன் நடித்துள்ளார்.

இவர் மலையாளத்தில் ரிதுபேதம், டெய்சி மற்றும் ஒரு யாத்ரமொழி ஆகிய மூன்று படங்களை இயக்கியுள்ளார். தமிழில், ஜீவா, வெற்றி விழா, சீவலப்பேரி பாண்டி, ஆத்மா, மகுடம், மைடியர் மார்த்தாண்டம் மற்றும் லக்கி மேன் படங்களை இயக்கியுள்ளார். மீண்டும் ஒரு காதல் கதை படத்தை இயக்கியதற்காக சிறந்த அறிமுக இயக்குனருக்கான தேசிய விருது வென்றவர்.

‘கிரீன் ஆப்பிள்’ என்ற விளம்பர நிறுவனத்தையும் நடத்தி வந்தார். பிரதாப் 1985 இல் நடிகை ராதிகாவை மணந்தார். இருப்பினும்,1986 இல் அவர்கள் பிரிந்தனர். பின்னர் அவர் 1990 இல் அமலா சத்தியநாத்தை மறுமணம் செய்து கொண்டார். தம்பதியருக்கு 1991 ஆம் ஆண்டு கேயா என்ற மகள் பிறந்தார். 22 ஆண்டுகளுக்குப் பிறகு 2012 இல் தம்பதியர் விவாகரத்து செய்தனர்.

Next Post

ஜுலை 18, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் பாடசாலைகள் மூடப்படும்

Fri Jul 15 , 2022
ஜுலை 18, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் பாடசாலைகள் மூடப்படும். புதிய தவணைக்கு ஜுலை 21 வியாழக்கிழமை மீள ஆரம்பிக்கும். – கல்வி அமைச்சு

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu