அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பான சட்டமூலத்திற்கு எதிராக ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சங்கங்களினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது தாக்கப்பட்டமை மற்றும் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச நிறுவனங்களின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயிலுநர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பினை இன்று (14) முன்னெடுத்துள்ளனர்.
இதனை, ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இன்றுடன் 3 ஆவது நாளாக இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகி ஆசிரியர் சங்கங்கள் முன்னெடுக்கும் தொழிற்சங்க போராட்டம் தொடர்கின்றது.