முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த நிலையில், தீ காயங்களுடன் உயிரிழந்த ஹிஷாலினிக்கு நீதிவேண்டி கேகாலை மாவட்டம் எட்டியாந்தோட்டை பிரதேச செயலகத்துக்கு உட்பட நாகஸ்தென்ன தோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம்மானது நாகஸ்தென்ன தேயிலைத் தொழிற்சாலை முன்பாக ஆரம்பமாகி நடைபாதையாக கோசமிட்டபடி அத்தோட த்தில் காந்தி சிலை முன்பாக
ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது
அத்தோடு காந்தி சிலை முன்பாக மெழுகுவர்த்தி ஏற்றி ஒருநிமிட மெளன அஞ்சலி செலுத்தினார்கள்
இதன்போது அவர்களின் கோரிக்கைகளையும் முன்வைதார்கள்
இனி மலையகத் தோட்டத் தில் இருந்து 18 வயதிற்கு குறைவான சிறுவர்களை வேலைக்கு அனுப்ப கூடாது
பாடசாலைகளில் இருந்து இடைவிலகிய மாணவர்களை இணங்கண்டு மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்கு சேர்த்தல்
தோட்ட பிரதேசங்களில் தேயிலைப் பரித்தல் தொழில் முறையை மட்டும் அல்லாது புதிய கைத்தொழிலை அறிமுகப்படுத்துதல் அல்லது பல்வேறுபட்ட தொழிற்சாலைகளை கொண்டு வந்து தொழில் வாய்ப்பு ஏற்படுத்தித் தருதல்
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நாகசத்தென்ன தோட்டம் ஓரகொள்ள தோட்டம்
சீபோத் தோட்டம் மூன்று பிரிவுகளில் இருந்தும் பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்
தோட்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் பாடசாலை மாணவர்கள் என பொது மக்களும் கலந்துகொண்டிருந்தனர்