ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 90 ரூபாவாக அறிவித்து வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு கோரி சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் இன்று (27) நுகர்வோர் அதிகார சபையில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
பால் மா பொதியின் விலை இன்று முதல் குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை இன்று (27) முதல் 90 ரூபாவாக குறைக்க உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
எனினும் சில உணவக உரிமையாளர்கள் குறைந்த விலையில் பால் தேநீர் வழங்கப்படுவதில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்
இந்த நிலையில், ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை வர்த்தமானியில் வெளியிடுமாறு கோரி, சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் இன்று (27) நுகர்வோர் அதிகார சபையிடம் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.