11 மாவட்டங்களில் டெல்டா தொற்றா ளர்கள் அடையாளம் – ஹேமந்த ஹேரத்

டெல்டா கொரோனா தொற்றாளர்கள் 11 மாவட்டங்களின் 26 நகரங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி நாட்டில் டெல்டா கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

மிகக் குறைந்த எண்ணிக்கையிலான டெல்டா நோயாளர்கள் மீது மேற்கொண்ட பரிசோதனை யில் நோய்த்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இருக்கும் டெல்டா நோயாளர்களின் அதிகபட்ச தரவு இது அல்ல என்றும் டெல்டா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை மிக அதிகம் இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்திலிருந்து பெரும்பாலான டெல்டா நோய்த் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள் ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ராகம, கடவத்த, கொழும்பு, அங்கொடை, கொட்டி காவத்தை, பியகம, நுகேகொடை, பொரலஸ்கமுவ, கல்கிசை, மஹரகம, பிலியந்தலை, பாணந்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கண்டி, அம்பாறை, குருணாகல், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் டெல்டா கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Next Post

ஒரு டோஸை கூட இதுவரையில் செலுத்திக் 30 வயதிற்கு மேற்பட்டவர்களை தேடி விஷேட வேலைத்திட்டம்

Sat Aug 7 , 2021
கொழும்பு நகரில் கொவிட் தடுப்பூசியின் ஒரு டோஸை கூட இதுவரையில் செலுத்திக் 30 வயதிற்கு மேற்பட்டவர்களை தேடி விஷேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று (07) முதல் சுகததாஸ விளையாட்டரங்கிற்கு குறித்த நபர்களை அழைத்து வந்து தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.  

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu