இலங்கை கிரிக்கெட் வீரர்களான நிரோஷன் டிக்வெல்ல மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் இங்கிலாந்தின் டர்ஹாம் வீதியில் சுற்றி திரிந்ததுடன் சிகரெட்டையும் கையில் வைத்திருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இது நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு (27) பதிவு செய்யப்பட்டு டுவிட்டரில் வெளியாகியுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துடனான கிரிக்கெட் போட்டிக்கு இலங்கை தேசிய அணி இங்கிலாந்தில் bio-bubble கீழ் பயணம் செய்துள்ளது, மேலும் நாளை(29) டர்ஹாமில் முதல் ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த வீடியோ வெளியான நிலையில் bio-bubble மீறியதற்காக குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் டிக்வெல்லவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர இலங்கை கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளது. அணி முகாமையாளரிடம் அறிக்கை கோரியதுடன், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது