கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிட்டது கொரோனா…
நாட்டில் கொரோனா நிலமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாத நிலைக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது கம்பஹா உட்பட சில மாவட்டங்களில் 1000 இற்கு மேற்பட்ட நாளாந்த தொற்றாளர்கள் இனங்காணப்படுவதாக குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண குறிப்பிட்டள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கொவிட் மரணங்கள் அதிகரித்து செல்லும் இந்த நிலமை தொடர்ச்சியாக சென்றால் கொவிட் தடுப்பு மையங்களை அமைப்பதற்கு பதிலாக தகன மேடைகளையே அமைக்க வேண்டியதாக இருக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.