கொவிட் உயிரிழப்புக்கள் மாதமொன்றில் 4500 வரை அதிகரிக்கும் அபாயம் − #டெல்டாவுக்கு சமமான நிலைமை ஏற்பட்டது
நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,508ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
நாட்டில் நேற்றைய தினம் (31) 67 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
கடந்த 27ம் திகதி 63 கொவிட் உயிரிழப்புக்களும்,
கடந்த 28ம் திகதி 66 கொவிட் உயிரிழப்புக்களும்,
29ம் திகதி 56 கொவிட் உயிரிழப்புக்களும், நேற்று முன்தினம் 61 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.