ஒரே நாளில் 100ஐ அண்மித்தது கொவிட் உயிரிழப்புக்கள் − ஆபத்தின் உச்சத்தை எட்டியது இலங்கை
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக கொவிட் தொற்றினால் நாளொன்றில் அதிகளவானோர் நேற்று (04) உயிரிழந்துள்ளனர்.
இதன்படி, நேற்றைய தினம் 94 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,821ஆக அதிகரித்துள்ளது.