மன்னாரில் காற்றாலை மின் திட்டமொன்றை வழங்குவது தொடர்பான கோப் குழுவின் விசாரணையில் இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்த கருத்து தொடர்பில், எந்தவொரு குறிப்பிட்ட நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ இந்த திட்டததுக்கான அங்கீகாரத்தை வழங்குமாறு கூறியதான கருத்தை நான் மறுக்கிறேன்” இது தொடர்பாக பொறுப்பான தகவல் பரிமாற்றம் தொடரும் என நான் நம்புகிறேன் என ஜனாதிபதி ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின் தலைவர் நேற்று வெள்ளிக்கிழமை (10) எரிசக்தி முதலீட்டுத் திட்டங்களுக்கு மன்னார் காற்றாலை திட்டத்தை வழங்குமாறு இந்தியப் பிரதமர் மோடி என்னை வற்புறுத்துகிறார்.அதனை அதானிக்கு வழங்குங்கள் என்று ஜனாதிபதி என்னிடம் கூறினார் என இலங்கை மின்சார சபைத் தலைவர் பெர்டினாண்டோ கோப் விசாரணையில் தெரிவித்துள்ளார்.