ஐரோப்பாவில் முதல் சீனாவின் #சினோபார்ம் தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலையின் கட்டுமானம் #செர்பிய (#serbia) இல் நேற்று (09) தொடங்கியது.
இந்த தொழிற்சாலை ஏப்ரல் 2022 இல் தொடங்கி 30 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி மருந்துகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளது, மேலும் செர்பியா மற்றும் பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளுக்கு #சினோபார்ம் தடுப்பூசிகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செர்பியா அரசு நான்கு மில்லியன் டோஸ்களை கொள்வனவு செய்ததுடன் மேலும் 200,000 நன்கொடையாகப் பெற்றுள்ளது. தற்போது தொழிற்சாலையையும் சீனாவுடன் ஒப்பந்தம் செய்து அமைக்கின்றது.