அதிபர் − ஆசிரியர் சம்பள முரண்பாட்டு பிரச்சினை

அதிபர் − ஆசிரியர் சம்பள முரண்பாட்டு பிரச்சினையை தீர்ப்பதற்கு, பரிந்துரை செய்யப்பட்ட கொடுப்பனவில் மூன்றில் இரண்டு சம்பள கொடுப்பனவை அடுதத வருடம் முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் அது குறித்து ஆராய தயார் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிக்கின்றது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார்.

சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்காக மூன்று கட்டங்களாக, அதனை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

இந்த நிலையிலேயே, மூன்று கட்டங்களாக வழங்கப்படும் சம்பள அதிகரிப்பில், இரண்டு கட்டங்களை அடுத்த வருடம் முதல் வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு ஆசிரியர்களுக்கு தடையாக உள்ள நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்

Next Post

எதிர்வரும் இருவாரங்களில் சுகாதார நடைமுறை வெளியான தகவல்

Fri Oct 15 , 2021
கொவிட் நிலைமைக்கு மத்தியில், எதிர்வரும் இரு வாரங்களுக்கு மக்கள் செயற்படும் விதம் தொடர்பான சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டது. இதன்படி, உள்ளக அரங்குகளில் திருமண நிகழ்வுகளை 50 பேருடன் நடத்துமாறும், வெளியக பகுதிகளில் 75 பேருடன் நடத்துமாறு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொவிட் அல்லாத மரண வீடொன்றில் அதிகபட்சம் 20 பேர் இருக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 25 வீதமான பார்வையாளர்களுட், எதிர்வரும் 21ம் திகதி முதல் திரையரங்குகளை திறக்க முடியும் […]

You May Like