2024 T20 உலகக் கிண்ணத் தொடரின் குழுநிலைப் போட்டிகளின் போது இலங்கை அணி எதிர்கொண்ட நீண்ட பயண நேர இன்னல்கள் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையில் (ICC) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அணியின் வசதிகள் குறித்த கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக அமெரிக்கா சென்ற இலங்கை கிரிக்கெட் பிரதிநிதியிடம் தனியான விசாரணை நடத்தப்படும் என்று குறிப்பிட்டார். “இலங்கை, அயர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் […]

இலங்கை தனது பிரத்தியேக பொருளாதார வலயம் அல்லது நாட்டின் பிராந்திய கடலின் அளவை விஸ்தரிக்கும் முயற்சியில் மாலைதீவுடன் இராஜதந்திர மோதல்களை வெற்றிகரமாக தவிர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு பிரத்தியேக பொருளாதார மண்டலம் என்பது கடலின் ஒரு பகுதியாகும். பொதுவாக ஒரு நாட்டின் பிராந்திய கடலுக்கு அப்பால் 200 கடல் மைல்கள் அளவில் இது நீடிக்கப்படுகிறது. இந்தநிலையில் இலங்கை தமது கடல்பிராந்தியத்துக்கு அப்பால் 200 கடல் மைல்களுக்கு தமது பிரத்தியேக பொருளாதார […]

இலங்கை கடந்த மே மாதம் வெளிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 475.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. இதேவேளை, இவ்வருடத்தின் கடந்த மே மாதம் வரையிலான பணவனுப்பல்கள் 2,624.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது. கடந்த 2023 ஆண்டு இதே காலப்பகுதியுடன் (ஜனவரி – மே) ஒப்பிடும் போது இது […]

இலங்கையில் தமது திட்ட அளவுருக்களுடன் ஒத்துப்போகும் வெளி வணிகக் கடனாளர்களுடன் விரைவில் ஒப்பந்தங்கள் எட்டப்படும் என்று பலமான எதிர்பார்ப்பை சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ளது. இந்தநிலையில், ஜூன் 12 ஆம் திகதி, செயற்குழு ஒன்று கூடி இலங்கை தொடர்பான 2வது மீளாய்வு தொடர்பில் கலந்துரையாடும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதார கொள்கை சீர்திருத்தங்கள் நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டுவதாக அவர் […]

இலங்கையில் ஸ்டார்லிங் இணைய சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், அந்த இணைப்பைப் பெறுவதற்கு இலங்கையர்கள் 400 தொடக்கம் 600 டொலர்களை வரை செலுத்த வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மதுசங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் மாதாந்தக் கட்டணம் 99 அமெரிக்க டொலர்களாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். செயற்கைக்கோள் தொழில்நுட்பமானது உலகில் எங்கும் இணைய அணுகலை அனுமதிப்பதோடு இலங்கையில் தற்போதுள்ள ஃபைபர் (Fiber) தொழில்நுட்பத்தை விட […]

இலங்கையில் இவ் ஆண்டின் முதலாவது காலாண்டில் 207 பேர் எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 13 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய பால்வினை நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது. இது 165 பேர் எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்டிருந்த கடந்த ஆண்டுடன் ஒப்பீடும் போது 25 சதவீத அதிகரிப்பை காட்டுக்கிறது. அதன்படி, இவ் ஆண்டின் முதலாவது காலாண்டில் பதிவான நோயாளர்களில் 23 ஆண்களும், ஐந்து பெண்களும் 15-24 வயதுக்கு உட்பட்டவர்களாவர். எஞ்சியவர்கள் […]

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீது முன்வைக்கப்பட்டுள்ள தேசிய பட்டியல் அங்கத்துவம் தொடர்பான குற்றச்சாட்டினை விசாரித்து, உண்மைகளை நீதிமன்றில் தெரிவிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார். தொம்பே மாகம்பிட்டிய (தெற்கு) பகுதியைச் சேர்ந்த வை.ஏ. சமன் நிஷாந்த என்ற நபர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டினை நேற்று பரிசீலித்த போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. நாட்டின் பிரஜை அல்லாத […]

நாட்டில் எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி முதல் மின்சார கட்டணத்தை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதன்படி 0-30 யூனிட் ஒன்றின் விலை 8 ரூபாயிலிருந்து 6 ரூபாயாகவும், 30-60 அலகுகளுக்கு இடைப்பட்ட அலகு 20 ரூபாயிலிருந்து 9 ரூபாவாகவும், 60-90 அலகுகள் 30லிருந்து 18 ரூபாவாகவும் குறைக்கப்படவுள்ளது. 120 வரையான அலகுக்கு 50 முதல் 30 ரூபா வரையும் குறைப்பதற்கு பரிந்துரை […]

இலங்கை சந்தைகளில் மீன்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதனைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கடற்றொழிலாளர்களை அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் மீன்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விலை அதிகரிப்பானது நுகர்வோரை மிகவும் பாதித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். காலி பிரதான மீன் வர்த்தக நிலையத்தில் 1 கிலோகிராம் பலையா மீனின் விலை 1,300 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. மேலும், 1 […]

இலங்கையில் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலப்பகுதியில் 44,430 வாகனங்கள் சந்தைக்கு விடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். அவற்றில் 38,144 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 6,286 கார்கள் உள்ளதாக அமைச்சர் சுட்டிக் காட்டினார். உள்ளூர் வாகன உற்பத்தியாளர்கள் குழுவுடன் நிதியமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், உதிரிபாகங்களை கூட்டுச்செய்து விற்பனை செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது. இக்கலந்துரையாடலில் பல […]

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu